புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் கீழே உள்ளது.

நிர்வாகம் : தேசிய உர நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை பொறியாளர் (உதவியாளர் கிரேடு 2)
மொத்த காலிப் பணியிடம் : 53
கல்வித் தகுதி :
இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.9,000 முதல் ரூ. 16,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.3.2019 (நாளை)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












