நேரு யுவகேந்திராவில் பணி வாய்ப்பு!

Posted By: Kani

நேரு யுவகேந்திரா சங்கேதனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அக்கெளண்ட் கிளர்க்/டைப்பிஸ்ட்
காலியிடம்: 15
சம்பள விகிதம்: ரூ25,000-81,100
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது பி.காம்., பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்று கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்
காலியிடம்: 26
சம்பளவிகிதம்: ரூ.56,100-1,77,100
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைபட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட 2 பணிகளுக்கான வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தேடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ஆண்களுக்கு ரூ.700/- பெண்களுக்கு ரூ.350/-. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2018

English summary
Nehru Yuva Kendra Sangthan (NYKS) invites applications for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia