பிளஸ் 2 படித்துள்ளீர்களா... தேசிய பாதுகாப்பு அகாடமி அழைக்கிறது..!!

தேசிய பாதுகாப்பு அகாடமியின் (என்.டி.ஏ.,) காலியாக உள்ள பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத இளைஞர்கள் மட்டும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தேசியப் பாதுகாப்புக் கழகம் (National Defence Academy- NDA) இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பயிற்சி மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கும் நிறுவனம் ஆகும்.
7 டிசம்பர் 1954-இல் துவக்கப்பட்ட இந்த ராணுவப் பயிற்சி நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் உள்ள கடக்வாஸ்லாவில் செயல்படுகிறது. இதன் தலைவர் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஆவார்.

இந்த அகாடமியில் படித்த ராணுவ அதிகாரிகள் 3 பரம் வீர் சக்ரா விருதுகளும் மற்றும் 12 அசோகச் சக்கர விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த அகாதமியில் பயிற்சி பெற்றவர்கள் இதுவரை 27 பேர் தலைமை ராணுவ அதிகாரிகளாக நியமனம பெற்றுள்ளனர்.

30 நவம்பர் 2019-இல் 137-வது பயிற்சி வகுப்பு முடித்த மாணவர்களில் தரைப்படை பிரிவினர 188, கப்பற்படையினர் 38, விமானப்படைப் பிரிவினர் 37 மற்றும் நட்பு நாடுகளின் பயிற்சி மாணவர்கள் 20 பேர் ஆவார்.

பிளஸ் 2 படித்துள்ளீர்களா... தேசிய பாதுகாப்பு அகாடமி அழைக்கிறது..!!

புனே நகரத்தின் வடமேற்கில் கடக்வாஸ்லா ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்த தேசிய பாதுகாப்பு அகாதமியின் வளாகம் 7,015 ஏக்கர்கள் (28.39 km2) பரப்பளவு கொண்டதாக உள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர்வதற்கு பல்வேறு கல்வி & உடல் தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.

+ 2 அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
விமானப்படைப் பிரிவு பயிற்சியில் சேர்வதற்கு + 2 படிப்பில் உயிரியல் தவிர பிற அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பயிற்சி துவங்கும் போது குறைந்தபடச வயது 15 ஆண்டு 7 மாதங்கள் நிறைவு பெற்றிருத்தல் மற்றும் அதிகபட்ச வயது 18 ஆண்டுகள் 7 மாதங்களுக்குள் இருத்தல் வேண்டும்.

இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

நேபாளம் அல்லது பூட்டான் நாட்டுக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

1 ஜனவரி 1962-க்கு முன்னர் இந்தியாவில் வாழும் திபெத் அகதிகளாக இருத்தல் வேண்டும்.

பாகிஸ்தான், பர்மா, இலங்கை, வியட்நாம் மற்றும் கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜாம்பியா, எத்தியோப்பியா, காங்கோ, மலாவி போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
இந்த பெருமைமிகு தேசிய பாதுகாப்பு அகாடமியில்தான் (என்.டி.ஏ.,) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

இங்கு தற்போது தரைப்படை பிரிவில் 208, கப்பல் படை பிரிவில் 42, விமானப்படை பிரிவில் 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி பிரிவில் 30 என மொத்தம் 400 இடங்கள் காலியாக உள்ளன.

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2.7.2005 -- 1.7.2008க்குள் பிறந்திருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத இளைஞர்கள் மட்டும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு ஆகிய முறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கான தேர்வு தேதி

இந்தப் பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி (21.4.2024) தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும்.. மகளிர், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

தேசிய பாதுகாப்பு அகாடமி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 9-ம் தேதிக்குள் (9.1.2024) விண்ணப்பிக்கவேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The NDA Exam is conducted twice every year for selecting eligible candidates for admission to Army, Navy and Air Force wings of NDA and Indian Naval Academy Courses (INAC). For the upcoming year, the NDA Exam will be conducted for the 153rd Course and the 115th Indian Naval Academy Course (INAC). The selection of eligible males & females will be done through written Examination and SSB interviews. Union Public Service Commission (UPSC) has released the UPSC NDA 1 Notification 2024 PDF for 20th December 2023 for 400 vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+