மத்திய அரசிற்கு உட்பட்ட நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தில் (NCSCM) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், திட்ட மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 103 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம் : நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 103
பணி : MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate, Project Scientist மற்றும் Project Manager பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ, பி.டெக், பட்டம், முதநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு :
விண்ணப்பதாரர் 35 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.67,000 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்க விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 23.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncscm.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.