நேஷனல் கம்பெனி லா ட்ரிபுனல் எனும் மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று, தட்டச்சு துறை பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Company Law Tribunal
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சுருக்கெழுத்தாளர்
மொத்த காலிப்பணியிடம் : 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.45,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nclt.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20.05.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nclt.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.