மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (NCERT) காலியாக உள்ள மூத்த ஆலோசகர், ஆலோசகர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 38
பணி : மூத்த ஆலோசகர், ஆலோசகர், Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead மற்றும் பல பணிகளுக்கு என 38 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், எம்.பில், பி.எச்டி என இவற்றல் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.23,000 முதல் ரூ.60,000 மாதம்
முக்கிய இணையதள முகவரிகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 28.07.2021 மற்றும் 30.07.2021 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncert.nic.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.