மும்பை டக் யார்டில் பயர்மேன் வேலை!

Posted By: Kani

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கட்டும் தளமான மும்பை டக் யார்டில் காலியாக உள்ள 95 தீயணைப்புவீரர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 95

பணி: தீயணைப்பு வீரர் (பொது-48, ஓபிசி- 26, எஸ்.சி-14,எஸ்.டி- 7)  

வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியுடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ அளவும், விரிந்த நிலையில் 85 செ.மீ. அளவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2018

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை!

English summary
Naval Dockyard Mumbai Recruitment 2018 Apply Online Fireman post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia