மாணவச் செல்வங்களே.. உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துடாதீங்க...!!!

நாட்டில் மிகவும் ஏழ்மையில் வசிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 8 மற்றும் 10 வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுடைய மாணவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க தேசிய உதவித்தொகை போர்ட்டல் (National Scholarship Portal ) தொடங்கப்பட்டது. இது சுருக்கமாக NSP அல்லது தேசிய உதவித்தொகை இணையதளம் என்று அழைக்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களே.. உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துடாதீங்க...!!!

இது மாணவர்களுக்கு அரசு உதவித்தொகைகள் விண்ணப்பித்தல், செயலாக்குதல், சரிபார்த்தல் மற்றும் அனுமதித்தல் ஆகிய செயல்பாடுகளைச் செய்ய வழிவகுக்கிறது. இது முரண்பாடுகளைக் குறைப்பது மற்றும் மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்குவதற்கான பொதுவான, பயனுள்ள மற்றும் வெளிப்படையான வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான உதவித்தொகைகளை ஒன்றிணைப்பதன் மூலம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கான "ஒரே தள" இணையதளமாக இது உள்ளது. இது அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

2016 -ல் இந்திய அரசு, தேசிய உதவித்தொகை இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.
2018 ஆம் ஆண்டில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இணையத்தை அணுகுவதற்கு இந்திய அரசாங்கம் தேசிய உதவித்தொகை இணையதள மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இது சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. முழு இணைய அடிப்படையிலான இணையதளம் 2020-ல் தொடங்கப்பட்டது.

இந்த வகையில் நாட்டில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் பெரும்தொகை, கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

ஆண்டுதோறும் தமிழகத்திலிருந்து 3093 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கப் போகும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். அந்தத் தகுதி இருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 8 மற்றும் 10 வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுடைய மாணவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திட்டம் தொடர்பான விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Scholarship Portal is an online portal by the Government of India for applying, processing, verifying and sanction of Government scholarships to students. It aims to reduce discrepancies and provide a common, effective and transparent way to disburse scholarships to students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+