சென்னை சித்த மருத்துவ கல்லூரியில் பணி!

Posted By: Kani

சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து 09-05-2018 ஆம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேராசிரியர்

காலியிடம்: 2

சம்பள விகிதம்: ரூ.37400-67000

வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சித்தா பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இணை பேராசிரியர்

காலியிடம்: 3

சம்பள விகிதம்: ரூ.15000-39100

வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சித்த மருத்துவத்த பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை director, Natonal institute of siddha என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி-யாக எடுக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டிடி மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் விளம்பர எண்னை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
director, National institute of siddha,
Tabaram sanatorium,
chennai-600047.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09-5-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்படிவத்தை டவுன்லோட் செய்வதற்கான லிங்க்

English summary
National institute of siddha direct recruitment for various posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia