நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 62 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனம்
மேலாண்மை : தமிழக அரசு
காலிப் பணியிட விபரங்கள்:
நாமக்கல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி நகர கூட்டுறவு வங்கியில் 27, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 27, கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 8 உதவியாளர் என சுமார் 62 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் பட்டப்படிப்பும், கூட்டுறவுப் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் உச்ச வயது வரம்பு இல்லை.
ஊதியம்:
- நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - மாதம் ரூ.11,900 முதல் ரூ.32,450 வரையில்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - மாதம் ரூ.12,200 முதல் ரூ.54,000 வரையில்
- கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : ரூ.4,000 முதல் ரூ.25,000 வரையில்
முக்கிய நாட்கள்:
- அறிவிக்கை வெளியான நாள் : 7 மார்ச் 2020
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31 மார்ச் 2020
- எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 26 ஏப்ரல் 2020
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.drbnamakkal.net என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://drbnamakkal.net/recruitment/admin/images/DRB Assistant Re-Notification206080_1583503751.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












