மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாய்லர் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பாய்லர் ஆப்ரேட்டர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 10
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பாய்லர் அட்டன்ட் பணிக்கான தொழிற்பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஊதியம் : ரூ.29,500 முதல் ரூ.70,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Cell, HRD Department, S&P Complex, NALCO, Angul - 759 145, Odisha
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nalcoindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












