மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயன்னுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறையில் எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCOINDIA)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : இயக்குநர் (நிதி)
கல்வித் தகுதி : நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம், சிஏ முடித்து குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : புது தில்லி
ஊதியம் : மாதம் ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 07.04.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை அல்லது www.nalcoindia.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












