நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக தற்போது கடைசி நாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு வரும் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு நிறுவனம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிட விபரங்கள் : 36
பணி : உதவியாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் : ரூ.11,900 முதல் ரூ.54,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ngtdrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31-05-2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ngtdrb.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












