நபார்டு வங்கியில் அற்புதமான வேலை இருக்கு..ரெடியா இருங்க....!!!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABARD Financial Services Limited -NABFINS) தற்போது நுகர்வோர் சேவை அதிகாரி (customer Service Officer -CSO) பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு https://nabfins.org/Careers/jobProfile.php?id=502 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), என்று அழைக்கப்படும் நபார்ட் வங்கி (NABARD) நாட்டின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.

நபார்டு வங்கியில் அற்புதமான வேலை இருக்கு..ரெடியா இருங்க....!!!

1982-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன் வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது.

நபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விஷயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சிவராமன் குழுவின் பரிந்துரையின்படி ஜூலை 12, 1982 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சட்டம் 1981" படி நபார்ட் வங்கி நிறுவப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் வேளாண் கடன் துறை மற்றும் கிராமப்புற திட்டமிடல் மற்றும் கடன் பிரிவு, விவசாய மறுகடன் மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிற்கு மாற்றாக இவற்றை ஒருங்கிணைத்து நிறுவப்பட்டது.

கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் வழங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகாரத்தை வைத்திருக்கும் அமைப்பு நபார்டு வங்கி ஆகும்.

இந்த நபார்ட் வங்கியின் கீழ்தான் நபார்ட் நிதி சேவை நிறுவனம் (NABARD Financial Services Limited -NABFINS) இயங்கி வருகிறது.

இந்த பெருமைமிகு நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABARD Financial Services Limited -NABFINS) தற்போது நுகர்வோர் சேவை அதிகாரி (customer Service Officer -CSO) பணியிடங்கள் காலியாக உள்ளன.

நுகர்வோர் சேவை அதிகாரி (customer Service Officer -CSO) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி விவரம்:
நபார்ட் நிதிச் சேவை நிறுவனத்தின்(NABFINS) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உரிமை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

நுகர்வோர் சேவை அதிகாரி (customer Service Officer -CSO) பணியிடங்களுக்கான வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது சலுகை, தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு https://nabfins.org/Careers/jobProfile.php?id=502 என்ற இணையதள முகவரியைக் கிளிக்
செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NABARD Financial Services Limited (NABFINS) is inviting eligible candidates to apply online for permanent posts of customer Service Officer -CSO. Interested and eligible candidates may apply online, after making sure that they meet the concerned eligibility criteria. For more details please login into https://nabfins.org/Careers/jobProfile.php?id=502
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+