மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 79 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)
மொத்த காலிப் பணியிடங்கள் : 79
பணி மற்றும் பணியிட விபரங்கள் :
- பொது - 41
- கால்நடை வளர்ப்பு / பால் தொழில்நுட்பம் - 05
- பொருளாதாரம் மற்றும் விவசாய பொருளாதாரம் - 07
- சுற்றுச்சூழல் - 04
- உணவு பதப்படுத்துதல் - 03
- வனவியல் - 03
- நிதி - 07
- நில மேம்பாடு - மண் அறிவியல் - 05
- தோட்டக்கலை மற்றும் விவசாயம் - 03
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு / பால் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் விவசாய பொருளாதாரம், சுற்றுச்சூழல், உணவு பதப்படுத்துதல், வனவியல், நிதி, நில மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்ற துறையில் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 28,150 முதல் ரூ.55,600 வரையில்
தேர்வு முறை : முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பதாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
- மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.650 மற்றும் கூடுதலாகத் தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.nabard.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade A-2019 Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












