நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..? அழைப்பு உங்களுக்குத்தான்!

Written By: Staff

நபார்டு வங்கி என்றழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு ஏ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 92

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு ஏ)- 92

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 21 - 30-குள்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800

சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வுக்கான தேதி: 12.05.2018

ஆன்லைன் முதன்மை தேர்வுக்கான தேதி: 06.06.2018

ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை 27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தின் கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலமாக வேலைக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

பணி விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்:

ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

5. பின்பு

பின்பு இமெயிலில் பெறப்பட்ட உங்களுக்கான ரிஜிஸ்டர் நம்பர், பாஸ்வேர்ட் கொண்டு கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

English summary
NABARD Recruitment For Assistant Manager Post: Apply Before Apr 2

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia