தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை டிப்ளமோ அல்லது பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- மேற்கண்ட பணியிடத்திற்கு 62 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம்: மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.3,75,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/nabrsccfeb21/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
- இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












