தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி, Data Designer, ETL Designer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு மாதம் ரூ.3.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Chief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer, Specialist Officer (Legal) உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி :
Chief Technology Officer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக், தகவல் தொழில்நுட்பம், BCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chief Risk Manager - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் CA, CS துறையில் முதுகலை பட்டதாரி, முதுநிலை மேலாண்மை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Designer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lead BI designer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Tech, MCA படித்திருக்க வேண்டும்.
ETL Designer - B.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Specialist Officer (Legal) - DRT, NCLT போன்றவற்றில் தேர்ச்சி பெற்று வங்கியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 01.12.2021 தேதியின் படி 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.1.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nabard.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.