தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள அணி தலைவர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் முடித்தவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அணி தலைவர்
கல்வித் தகுதி : வேளாண்மைத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் முடித்து, 20 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- மேற்கண்ட பணியிடத்திற்கு 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம்:
மாதம் ரூ.55,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.nabcons.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












