தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.87 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கட்டிட பொறியாளர்
கல்வித் தகுதி : B.E, B.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடத்திற்கு 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம்:
மாதம் ரூ.87,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.nabcons.com/downloads/Advertisement_Corporate_Office-Delhi.pdf?fbclid=IwAR2uwmsJNXXXNQn2tPzh8_WtsMssocJLAAUdjYM470TIyPHNTxEXQ8gWfn4 என்ற இணையதளம் மூலம் 03.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி தேர்வு திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.