NABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நபார்டு வங்கி நிர்வாகம் மத்திய அரசிற்கு உட்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nabard.org ஆகும்.

பணி மற்றும் தகுதிகள்

பணி மற்றும் தகுதிகள்

டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் மற்றும் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹிந்தி துறைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஹிந்தி அல்லது ஆங்கிலத்துறையில் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரு பணியிடங்களுக்கும் 18 முதல் 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன?

எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன?

டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் துறையில் 83 காலிப் பணியிடங்களும், டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) துறையில் 09 காலிப் பணியிடங்களும் உள்ளன.

ஊதியம் எவ்வளவு தெரியுமா?

ஊதியம் எவ்வளவு தெரியுமா?

டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் மற்றும் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) ஆகிய இரு பணியிடங்களுக்குமே 32,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

முக்கியத் தேதிகள்

முக்கியத் தேதிகள்

அறிவிப்பு வெளியான நாள் : 9 செப்டம்பர் 2019
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 14 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 அக்டோபர் 2019

தேர்வு முறை :

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடத்தில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nabard.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ.400 மற்றும் + 50 ரூபாய் எனவும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NABARD Recruitment 2019: Apply Online for 91 Development Assistant Posts nabard.org
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X