Nabfoundation peon recruitment 2022
விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி வழங்கும் வங்கியான, 'நபார்டு' என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில், அலுவலக உதவியாளர், பியூன் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு கம்ப்ளீட் பண்ணி இருந்தீங்கனா...! யோசிக்காதீங்க உடனே விண்ணப்பிங்க...! நாளை கடைசி நாள்.
நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி துணை நிறுவனம் ( NABFOUNDATION )
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· அலுவலக உதவியாளர்(office Assistant)
· பியூன் (peon)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.11.2022
வயது வரம்பு
பியூன், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், குறைந்தபட்சம் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும். திறன் மேம்பாடு பொறுத்து, ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

நோட் இட் ப்ளீஸ்...!
Ø விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
Ø தெரிவு செய்யப்படும் நபர்கள் தற்போது மும்பையில் பணி அமர்த்தப்படுவர்.
Ø இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: நவம்பர், 10 2022
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப மாதிரியை பெற்று பூர்த்தி செய்து, கோரப்பட்ட ஆவணங்களுடன்
Ø nabfoundation@nabard.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
Ø 10.11.2022 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Ø கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.