சத்யபாமா இன்ஸ்டிடியூட்டுக்கு ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து...!

சென்னையில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களுள் ஒன்றான சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன இன்ஸ்டிடியூட்டுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கியுள்ளது.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி என்ற அமைப்பானது இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் சுயாட்சி அமைப்பாக உருவாகியுள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சத்யபாமா இன்ஸ்டிடியூட்டுக்கு ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து...!

1986-ல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994-ம் ஆண்டு இந்த என்ஏஏசி அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாக அமைந்தது. 1992-ம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசை படுத்தும் அமைப்பொன்றை நிறுவ மத்திய அரசால் தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, என்ஏஏசி 1994-ம் ஆண்டு பெங்களூரில் அமைந்தது. பெங்களூரு நகரை தலைமையகமாகக் கொண்டு என்ஏஏசி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த என்ஏஏசி அமைப்புதான் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவன இன்ஸ்டிடியூட்டுக்கு ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்தை வழங்கியுள்ளது.
சத்யபாமா பல்கலைக்கழகமானது 35 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஜேப்பியாரால் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவன இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த சிறப்பு அந்தஸ்தை எட்டியுள்ளதன் மூலம் இந்த கல்வி நிறுவனம் பெருமை கொள்வதாக பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் சமூக சேவைகளில் முழு ஈடுபாடு கொண்டவர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் . மத்திய பெண்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யபாமா பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அந்தஸ்தை இன்ஸ்டிடியூட் எட்டியுள்ளது குறித்து வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மேலும் கூறியதாவது: இந்த உயர்கல்வி நிறுவனம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஜேப்பியாரால் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கியுள்ளது

இது எங்கள் கல்வி நிறுவனம் சார்பில் 2023-ம் ஆண்டில் படைக்கப்பட்ட சாதனைகளில் ஒன்று. பல்கலைக்கழக மானிய குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிகர்நிலை பல்கலைக்கழகம் வகை 1-ல் யூ.ஜி.சி. ஒழுங்குமுறை சட்டம் 2018 (தரப்படுத் தப்பட்ட சுயாட்சியை வழங்கும் பல்கலைக்கழக வகைப்படுத்துதல்) உரிமையின்படி தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களது நிறுவனத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதுதோடு நமது எதிர்க் கால முயற்சிகளுக்கான உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் எல்லை யற்ற மற்றும் பயனுள்ள பங்களிப்பையும் இந்த தேசத்துக்கு வழங்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Assessment and Accreditation Council (NAAC) has granted Sathyabama Institute of Science and Technology category l status of deemed to be university. The status has been granted as per the provisions of the UGC Regulations, 2018.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+