மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மும்பை பல்கலைக்கழகமும், இந்து மத ஆய்வுகளுக்கான ஆக்ஸ்ஃபோர்டு மையமும் இணைந்து கோயில் மேலாண்மைப் படிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
இது தொடர்பாக, ஆக்ஸ்ஃபோர்டு மையத்துடன் மும்பை பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையமும் சம்ஸ்கிருத துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மும்பை பல்கலைக்கழகம் (University of Mumbai), இந்திய மாநிலம் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இதனுடன் இணைந்துள்ள கல்லூரிகள் மும்பை நகர் முழுமையுமன்றி நான்கு கடலோர மாவட்டங்களான தாணே, ராய்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க்கிலும் பரவி உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு முனைவர் ஜான் வில்சனால் துவங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் வடிவம் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களை ஒத்து இருந்தது; இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் வழியே கல்வி கற்பிக்கப்பட்டது. புனித சேவியர் கல்லூரி 1868ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு முனைவர் ஜான் வில்சன் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்றார்.

வரது மனைவி மார்கெரெட் பேய்ன் வில்சன் பெண்களுக்காக 16 பள்ளிகளைத் துவங்கினார். துவக்கத்தில் எல்பின்ஸ்டன் கல்லூரி மும்பை பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாக இருந்தது.
1996ஆம் ஆண்டு ஓர் அரசாணை மூலம் பம்பாய் பல்கலைக்கழகம் என்றிருந்த பெயர் மும்பை பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
இந்த பெருமைமிகு மும்பை பல்கலை.யில்தான் இந்தப் படிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயில மாணவ, மாணவிகள் வருகின்றனர். அந்த அளவுக்கு கல்வித் தரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிப் போனது ஆக்ஸ்ஃபோர்டு கலவி நிறுவனம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இ ந்து மத ஆய்வுகளுக்கான ஆக்ஸ்ஃபோர்டு மையம் செயல்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் செயல்படும் இந்து மத ஆய்வுகளுக்கான ஆக்ஸ்ஃபோா்டு மையம் மற்றும் மும்பை பல்கலைக்கழகம் இடையிலான ஒத்துழைப்பின்கீழ், இணையவழி மற்றும் நேரடி முறையில் பல்வேறு பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படவுள்ளன.
அதன் அடிப்படையில், கோயில் மேலாண்மைப் படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இந்தியாவில் பல பெரிய கோயில்கள் உள்ளதால், நிஜ வாழ்க்கை உதாரணங்களிலிருந்து உத்வேகம் பெறும் தனித்துவமான மேலாண்மைப் படிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
இந்து மத தத்துவங்களின் விரிவான ஆய்வே, இரு கல்வி நிலையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் நோக்கமாகும். ஆன்மிகம் மற்றும் நிா்வாகப் பயிற்சியின் தனித்துவமான கலவையாக கோயில் மேலாண்மைப் படிப்பு இருக்கும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஆர்வம் மற்றும் வேலை வாய்ப்புகளின் அடிப்படையில், பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் இந்தப் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிஏ பாடப்பிரிவுகளைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்து ஆய்வுகள் மையம் மற்றும் சமஸ்கிருதத் துறை ஆகியவை இந்து ஆய்வுகளுக்கான ஆக்ஸ்போர்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்து தத்துவம் பற்றிய விரிவான ஆய்வில் கவனம் செலுத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் இரு துறைகளும் ஆக்ஸ்ஃபோர்டு மையத்துடன் இணைந்து சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வடிவங்களில் பாடத்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தும். ஆக்ஸ்போர்டு மையத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவே கோயில் மேலாண்மை படிப்பு ஆகும்.
உயர்கல்வி பாடத்திட்டத்தில் இந்திய அறிவு முறையை ( IKS )
இணைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் உந்துதலுக்கு ஏற்ப ஆறு மாத சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் இரண்டு நிர்வாகப் பள்ளிகளான ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் மற்றும் அல்கேஷ் தினேஷ் மோடி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்று மும்பை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












