எம்.பில் படிப்பில் மாணவர் சேரவேண்டாம்.. யுஜிசி மீண்டும் எச்சரிக்கை..!!

பட்டமேற்படிப்பு படித்துள்ள மாணவர்கள் எம்.பில் (M.Phil) படிப்புகளில் சேர்வதற்குத் தயாராக வேண்டாம் என்று மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

1956 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

இந்த யுஜிசி அமைப்புதான் மாணவர்களை தற்போது மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளது.
டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.

எம்.ஃபில் படிப்புகளை நிறுத்தப்போவதாக 2022-ம் ஆண்டிலேயே யுஜிசி தெரிவித்த நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி (என்இபி) எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எம்.பில் படிப்பில் மாணவர் சேரவேண்டாம்.. யுஜிசி மீண்டும் எச்சரிக்கை..!!

கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எம்.பில் படிப்பு நீக்கப்படுகிறது என்றும், இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட எம்.பில் பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது.

னால் எம்.பில் படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும், சில பல்கலைக்கழகங்கள் அந்த படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானது
இளநிலை, முதுநிலை படிப்பு படித்து அதன் பிறகு எம்.பில் படிப்பை மாணவர்கள் படித்து வந்த நிலையில், இனி வரும் கல்வியாண்டில் இருந்து எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படும் என அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இனி பிஎச்டி படிப்பதற்கு எம்.பில் தகுதியாகப் பார்க்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் ஏற்கெனவே எம்.பில் படிப்பில் சேர்ந்து படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும், அதேபோல் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த எம்.பில் பட்டங்கள் செல்லும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் யுஜிசி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எம்.பில் படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

யுஜிசியின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சில கல்வி நிறுவனங்கள் எம்.பில். படிப்பில் மாணவர்களை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில் எம்.பில். பட்டமானது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம் கிடையாது என கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டி காட்டி பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்புக்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, புதிதாக எம்.பில் சேருமாறு அறிவிப்பு வந்தால் அதைக் கண்டு அந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யுஜிசி மீண்டும் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடச் செய்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The UGC has issued a notification, alerting students against pursuing an MPhil degree as it is no more recognised. Universities have been warned against offering the programme and admissions for the 2023-24 academic year are prohibited. Institutions have been directed to halt 2023-24 MPhil admissions following UGC guidelines. An official notification stated MPhil's non-recognition, citing UGC regulations from 2022
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+