10, 12, மற்றும் கல்லுரி பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

Posted By:

பிரதமரின் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இயற்கை வழிக்காட்டி பயிற்சி பிரதமர் நரேந்திர மோடி தேசியதிறன் மேம்ப்பாட்டு மற்றும் சுய தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் .
இதற்கென தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது . இதன் அடிப்படையில் மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தினர். மத்திய சுற்றுசூழல் , வன அமைச்சகம் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க முன்வந்துள்ளது.

உயர்க் கல்வி பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு

பசுமை திறனாய்வு வேலை வாய்ப்பு வளர்ச்சி நிகழ்ச்சி திட்டத்தில் இயற்கை வழிகாட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10, 12 மற்றும் வகுப்புகளை பாதியில் நிறுத்தியவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குகிறது. பயிற்சி முடித்தவர்கள் நம் நாட்டின் சுற்றுலா தளங்கள் வன விலங்கு சரணாலயங்களில் வழிகாட்டியாக முடியும்.

இந்திய விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆய்வகங்களின் சார்ப்பில் பத்துமாவட்டங்களில் மட்டும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதற்காக டேராடூன் , அந்தமான், தென் சிக்கிம், கோயம்புத்தூர், இட்டாநகர் , புனே உள்ளிட்ட பத்து பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உயர்க் கல்வி பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு

ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 மாத பயிற்சி அளிக்கப்படுகின்றனர் . இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வனம், வன விலங்கு புலிகள் சரணாலயத்தில் வேலைவாய்பு பெறலாம் .
இந்திய தாவரவியல் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதால் தாவரம் , விலங்குகள் குறித்து ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தாவரவியல் பயிற்சி தோட்டக்கலை மற்றும் பயிர்கள் பாதுகாப்பு தொடர்புடைய அரசு பணிகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கும் . இது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் இது அனைத்து உயர் வகுப்பு மாணவர்களையும் மேம்படுத்தும்.

சார்ந்த தகவல்கள் : 

தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு 

வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலையில் சீனியர், ஜீனியர் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு

English summary
above article mentioned about job opportunity for high school, college drop out students through the skill development India scheme

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia