இளைஞர்களே...!மறந்துராதீங்க... உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு...!!

நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்களில் சீரிய முறையில் செயல்பட்டு வரும் மத்திய
உள்துறை அமைச்சகத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க் (UDC) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களில் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாக இருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.

இளைஞர்களே...!மறந்துராதீங்க... உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு...!!

இதன் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். உள்துறை இணை அமைச்சர்களும், இந்தியக் குடிமையியல் அதிகாரிகளான செயலர்களும் இவ்வமைச்சகத்தில் செயல்படுகின்றனர்..

உறுதியான மற்றும் வளமான நாடாக இந்தியா வளர, நாட்டின் அமைதியும், ஒற்றுமையும் கருத்தில் கொண்டு இந்த வமைச்சகம் பல்வேறு முக்கிய நோக்கங்களைக் கொண்டு திறமையான முறையில் செயல்பட்டு வருகிறது

ராணுவம், கிளர்ச்சி மற்றும் தீவிரவாதம் உட்பட உள்நாட்டு அச்சுறுத்தல்களை நீக்குதல், சமூக ஒற்றுமையை உண்டாகுதல், பாதுகாத்தல், உறுதிசெய்தல், சட்டத்தை அமலாக்கி தகுந்த நேரத்தில் நீதியைக் காத்தல்,
குற்றங்கள் நிகழாத சமுதாயத்தை அமைத்தல், மனித உரிமையை நிலைநிறுத்தல், இயற்கை மற்றும் மனித பேரழிவுகளால் உண்டான இழப்புகளை சீர்செய்தல் ஆகிய முக்கிய பணிகளைச் செய்கிறது.

இப்பணிகளைச் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்திய உளவுத்துறை, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ)
தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு,
பன்னோக்கு முகமை மையம், தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு, கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம், டெல்லி காவல்துறை ஆகியவை இதன் கீழ் இயங்கி வருகின்றன.

இந்த பெருமை மிகு மத்திய உள்துறை அமைச்கத்தில் தற்போது 4 அப்பர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கான முறையான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் லெவல்-04 (Level - 04 (Grade Pay Rs.2400) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் எல்டிசி(LDC) பதவியில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த உள்துறை அமைச்சக பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

அப்பர் டிவிஷன் கிளார்க் (Upper Division Clerk) பணிக்கு தகுதியான நபர்கள் டெபுட்டேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து a[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப இம்மாதம் 18-ம் தேதி(18.12.2023) கடைசிநாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Home Affairs has released the job notification for 4 UDC Job vacancies. The educational qualification for recruitment is Analogous. Interested and eligible candidates can able to apply for the job.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+