கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் மிகப்பெரிய அளவில் டிசம்பர் 2-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தரஉள்ளன. மொத்தம் 20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கோவை நிர்மலா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருமாறு மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், வெள்ளலூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு 94990 55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமைப் பயன்படுத்திக் கொண்டு அருமையான வேலைவாய்ப்புகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications












