சென்னையில் ஆசிரியர்களுக்கு உதவும் பொருட்டு வரும் 21-ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பலன் அடையலாம்.
தமிழக தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு இந்த மெகா3 வேலை வாய்ப்பு முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கவுள்ளன.
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பினை வழங்கும் நோக்கில் தனியார் துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக தனியார் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் முதல்வர், துணை முதல்வர் (Principal, vice principal) உள்ளிட்ட பதவிகளில் சுமார் 248 பணியிடங்கள் காலியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், உயிரியல், தாவரவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளியல் (Tamil, English, biology, botany, maths, computer science, commerce) உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 3,548 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் கிண்டர்கார்டன், தொடக்க (Kindergarten, Primary) பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 21-ஆம் தேதி சென்னை மாண்ட் போர்ட் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாத ஆசிரியப் பெருமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ், பயோ-டேட்டாவோடு முகாம் நடைபெறும் மையத்துக்கு காலையில் வரவேண்டும்.


Click it and Unblock the Notifications












