அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. தற்போது மயிலாடுதுறை என்ற பெயரிலேயே மாவட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.18 ஆம் நூற்றாண்டு வரை "மயூரபுரம்" என்றும் பின்பு "மாயவரம்" என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது "மயிலாடுதுறை" என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது.

ஆன்மிக பூமி வைத்தீஸ்வரன் கோவில்,கீழப்பெரும்பள்ளம் போன்ற நவக்கிரகங்கள் மயிலாடுதுறை நகரத்திற்கு மிகவும் அருகில் உள்ளன.சைவமும் தமிழும் வளர்த்து தமிழ்த்தொண்டு செய்து வரும் தருமபுரம் ஆதினம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இம்மண்ணின் நீண்ட பாரம்பரியம் சான்றாகும். தேசத்தந்தையை ஈர்த்த தியாகபூமி 1915,1921,1927 என மும்முறை காந்தியடிகள் பாதம் பதித்த மண்.காந்தியுடன் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்த தியாகி வள்ளியம்மையை பெற்ற தில்லையாடி இங்குதான் உள்ளது.அதற்கு "தில்லையாடி வள்ளியம்மையின் பெயரால் ஒரு நினைவு மண்டபமும் தழிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.
பழமையான நகராட்சி ஆங்கிலேயே ஆட்சியில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்,(ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே நகரம் என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டதில் மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று.மயிலாடுதுறை நீதிமன்றமும், சப் கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகள் பழைமையான வரலாறுடையது.இங்குள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி 148 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பள்ளி என்பதுடன் சிறந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உருவாக்கிய பள்ளி இந்நகரின் நடுவில் அமைந்துள்ளது. 1877ல் சென்னை-தூத்துக்குடி ரெயில்பாதை அமைக்கபட்ட போது முக்கிய இரயில் சந்திப்பாக மயிலாடுதுறை இருந்து வந்துள்ளது.
இந்த பெருமைவாய்ந்த மயிலாடுதுறையில் தான் தற்போது மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்
றியுள்ளதாவது:
மத்திய அரசு நிதி
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டு வருமானம்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
ஆதார் எண்
இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதை தமது ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும் ஆதாா் எண் மற்றும் வங்கி விவரங்களை, வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாணவியா்களின் விவரங்களை எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பா்மேஷன் சிஸ்டம் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இணையதள முகவரி:
தொடர்புக்கு... கூடுதல் விவரங்களுக்கு https://mayiladuthurai.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












