மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் மவுலான ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மவுலான ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவிப் பேராசிரியர் (கிரேடு - II)
காலிப் பணியிடங்கள் : 69
ஊதியம் : மாதம் ரூ.70.900
பணி : இணை பேராசிரியர்
காலியிடங்கள் : 49
ஊதியம் : மாதம் ரூ.1,39,600
பணி : பேராசிரியர்
காலியிடங்கள் : 26
ஊதியம் : மாதம் ரூ.1,59,100
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இசிஇ, சிஎஸ்இ போன்ற பிரிவுகளில் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் யூஜிசி விதிமுறைகளின்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
www.manit.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.08.2019
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 26.08.2019


Click it and Unblock the Notifications












