எப்ப மதுரைக்காரங்களா...!

தமிழ்நாட்டின் தென் மாவட்டமான மதுரையில், மாவட்ட நீதிமன்றத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இப்பணிக்கு தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் வாயிலாக தெரிவு செய்யப்படுவர்.

இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிர்வாகம் : மாவட்ட நீதிமன்றம், மதுரை

மேலாண்மை : மாநில அரசு

தேர்வு இல்லாமல் ரூ.90 ஆயிரத்தில் வேலை வேணும்னா....! இன்று கடைசி

பணி

ü Chief Legal Aid Defense Counsel,
ü Deputy Chief Legal Aid Defense Counsel,
ü Assistant Legal Aid Defense Counsel,
ü Office Assistants/ Clerks,
ü Receptionist-cum-Data Entry operator (Typist)
ü Office peon (Munshi/Attendant)

 

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி

தகுதியும், திறமையும் இருக்கும் ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், விண்ணப்பத்தின் வலது ஓரத்தில் முறையாக சுயசான்றொப்பமிடப்பட்ட இடத்தில், குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இன்று கடைசி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

Office Assistants/ Clerk, Receptionist-cum-Data Entry operator (Typist) மற்றும் Office peon ஆகிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். கூடுதல்

தேர்வு முறை

விண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம்

இந்தப் பதவிகளுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

பணி விவரங்கள்

Chief Legal Aid Defense Counsel

Ø குற்றவியல் சட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.
Ø குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல்.
Ø ஒரு பாதுகாப்பு ஆலோசகரின் நெறிமுறைக் கடமைகளைப் பற்றிய முழுமையான புரிதல்.
Ø வழிநடத்தும் திறன் கொண்ட மற்றவர்களுடன் திறம்பட மற்றும் திறமையாக வேலை செய்யும் திறன்.
Ø செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தது 30 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டிருக்க வேண்டும்,
Ø கணினி அமைப்பு பற்றிய அறிவு, விரும்பத்தக்கது

Deputy Chief Legal Aid Defense Counsel

Ø குற்றவியல் சட்டத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல்.
Ø சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.
Ø சட்ட ஆராய்ச்சியில் திறன், பாதுகாப்பு ஆலோசகரின் நெறிமுறைக் கடமைகள் பற்றிய முழுமையான புரிதல்.
Ø செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 20 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டிருக்க வேண்டும்.
Ø வேலையில் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும்.

Assistant Legal Aid Defense Counsel

Ø 1 முதல் 3 ஆண்டுகள் வரை குற்றவியல் சட்டத்தில் பயிற்சி.
Ø சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன்.
Ø பாதுகாப்பு ஆலோசகரின் நெறிமுறைக் கடமைகளைப் பற்றிய முழுமையான புரிதல்.
Ø சிறந்த எழுத்து மற்றும் ஆராய்ச்சி திறன்.
Ø வேலையில் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவு.

அலுவலக உதவியாளர்கள்/ எழுத்தர்கள்

Ø கல்வித் தகுதி: பட்டப்படிப்பு,
Ø அடிப்படை சொல் செயலாக்க திறன் மற்றும் கணினியை இயக்கும் திறன்,
Ø தட்டச்சு வேகம் 40 WPM,
Ø டிக்டேஷன் எடுத்து தரவை உள்ளிடும் திறன் (Ability to take dictation and entering data)
Ø கோப்பு பராமரிப்பு மற்றும் செயலாக்க அறிவு (File maintenance and processing knowledge)

Receptionist-cum-Data Entry Operator

Ø கல்வித் தகுதி: பட்டப்படிப்பு,
Ø சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன்.
Ø சொல் செயலாக்க திறன்கள்,
Ø தொலைத்தொடர்பு அமைப்புகளில் வேலை செய்யும் திறன் (தொலைபேசிகள், தொலைநகல் இயந்திரங்கள், சுவிட்ச் போர்டு கள் போன்றவை),
Ø நல்ல தட்டச்சு வேகத்துடன் கூடிய திறமை

பியூன்

Ø கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு
Ø அலுவலகத்தில் வேலை செய்யும் திறன்
Ø இரு சக்கர வாகனம் கண்டிப்பாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு மக்களே... இன்று கடைசி நாள்... உடனே விண்ணப்பங்களை அனுப்ப மறந்துடாதீங்க.... கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பாணையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jobseekers in Madurai district direct appointment without examination Rs. Want a job in 90 thousand...! Apply immediately as per the details specified in the notification; Don't forget today is the last day..!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X