மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 2,329 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. எக்ஸாமினர், டிரைவர், ரீடர், ஓஏ உள்ளிட்ட 22329 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று காணலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின் தூக்கி இயக்குபவர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பிகலாம்.

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 50 வினாக்கள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவு மற்றும் கணிதப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதற்கான கால அளவு இரண்டரை மணி நேரம்.
தேர்வுக் கட்டணம் : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
ரூ. 550 கட்டண் செலுத்ததேண்டும். இருப்பினும் எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி(SC, SC(A), ST), மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதள பக்கத்துக்கு சென்று தகுந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். வேண்டும்.
வரும் 27-05-2024-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று காணலாம்.


Click it and Unblock the Notifications












