சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court)
பணி : Law Clerks
மொத்த காலிப் பணியிடங்கள் : 37
கல்வித் தகுதி :
- 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் சட்டத் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.hcmadras.tn.nic.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 13.09.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Viva Voce சோதனையில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hcmadras.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.


Click it and Unblock the Notifications












