தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வரும் பிப்ரவரி 04 ஆகும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் கீழே காணவும்.

நிர்வாகம் : தமிழக அரசு
பணி : மாவட்ட நீதிபதி
மொத்த காலிப் பணியிடங்கள் : 31
சம்பளம் : மாதம் ரூ.51,500 முதல் ரூ. 63,070 வரையில்
இணைய முகவரி : https://www.mhc.tn.gov.in/recruitment/login
வயது வரம்பு :
- 01.07.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மற்ற அனைத்துப் பிரிவினரும் 35 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி : சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்று உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 06.04.2019
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2019 மற்றும் 26.05.2019
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.2000
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கட்டணம் செலுத்தும் முறை : வங்கி வரவோலையாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_1_2019.pdf அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












