சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ரூ.30 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்னயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : சென்னை உயர்நீதிமன்றம்
பணி : சட்ட எழுத்தர்
மொத்த காலிப் பணியிடம் : 68
கல்வித் தகுதி : சட்டப்படிப்பு
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ. 30,000 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.hcmadras.tn.nic.in/ என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக் வேண்டிய கடைசி தேதி : 25.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.hcmadras.tn.nic.in/Law Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்னும் லிங்கினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












