மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பொறியியல், டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மெட்ராஸ் உர நிறுவனம் (MFL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 45
பணியிடம் : சென்னை
பணி : Graduate Apprentice மற்றும் Technician Apprentice
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.17,000 முதல் ரூ.20,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.madrasfert.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து 24.02.2021 (NATS portal) அன்றுக்குள் மற்றும் 01.03.2021 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.madrasfert.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.