LIC உதவி நிர்வாக அலுவலர் பணி 2023
உதவி நிர்வாக அலுவலர் பதவிக்கான 300 காலிப்பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஜன.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, இன்னும் 10 நாள்கள் தான் இருக்கு என்பதை மறக்காதீங்க....!
நிர்வாகம் : இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (Life Insurance Corporation of India)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2023
கல்வி தகுதி
உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பி.ஏ., பி.எஸ்.சி.,பி.காம்., போன்ற இளநிலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஆவார்.
ஊதியம்
உதவி நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 53,600 அடிப்படை ஊதியம் பெறுவர். இதர சலுகைகள் அரசு விதிகள்படி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø இப்பதவிகளுக்கு 15.01.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.01.2023
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2023 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 02.01.1993 தேதிக்கு முன்பு அல்லது 01.01.2002 தேதிக்கு பின்பு பிறந்திருக்கக்கூடாது.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
தெரிவு முறை மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மை தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 31.01.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Ø 31-01-2023 அன்று இணையதளம் வாயிலாக விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.