LIC பயிற்சி மேம்பாட்டு அதிகாரி பணி 2023
பயிற்சி மேம்பாட்டு அதிகாரி பதவிக்கான 1516காலிப்பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு பிப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கு என்பதை மறக்காதீங்க....!
நிர்வாகம் : இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (Life insurance corporation of india)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø பயிற்சி மேம்பாட்டு அதிகாரி (Apprentice Development Officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1516
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2023
கல்வி தகுதி
பயிற்சி மேம்பாட்டு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி அல்லது மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஃபெலோஷிப் (Fellowship) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
பயிற்சி மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 51,500 வரை உதவித்தொகை(Stipend) பெறுவர். இதர சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø இப்பதவிகளுக்கு 21.01.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.02.2023
எல்.ஐ.சி தென் மண்டலத்தில் மட்டும் தோராயமாக 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகள் காலிப் பணியிடங்கள் உள்ளன. தேர்வு மற்றும் நியமனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2023 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 02.01.1993 தேதிக்கு முன்பு அல்லது 01.01.2002 தேதிக்கு பின்பு பிறந்திருக்கக்கூடாது.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில், தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வு 12.03.3023, முதன்மை தேர்வு 08.04.2023 ஆகிய நாட்களில் நடக்கும்.
முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மை தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவர். அதன் பின், இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 10.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Ø விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகசமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
சலுகைகள் ஏராளம்
வளர்ச்சி அதிகாரியாக பதவி பெற்றவுடன் (Probationary Development: Officer), நிலையான சம்பளம் மற்றும் படிகளுடன், கிராஜூவிடி (Gratuity), வரையறுக்கப்பட்ட பங்களிப்பு கொண்ட ஓய்வூதியம், (Defined Contiributory Pension Scheme), விடுப்பு பயண சலுகை (LTC), மருத்துவச் சலுகை, குழுக்காப்பீடு (Group Insurance)மற்றும் குழுவின் தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகனம் வாங்குவதற்கான முன் பணம் (2 வீலர் மற்றும் 4 வீலர்)ஆகிய பயன்கள் உண்டு. மேலும் கைப்பெட்டி/லெதர் பேக், கைப்பேசி (Mobile Handset) போன்றவை வாங்கிய பின் அத்தொகையினை திரும்பப் பெறும் வசதிகளும் உண்டு.
வளர்ச்சி அதிகாரியாக (Development Officer) 'பணி நிரந்தரம் பெற்ற பின், செயல்திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கும் (Performance Linked Incentives) தகுதி பெறலாம்.