லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Life Insurance Corporation (LIC) of India) நிறுவனத்தில் காலியாக உள்ள காப்பீடு ஆலோசகர் (Insurance Advisor) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை ரோஜ்கார் சங்கம்(Rojgaar Sangam) வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://sewayojan.up.nic.in/pJobdescriptionMela.aspx?id=/lg2OnEzNoV8c9k7dXTA2Q== என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி-Life Insurance Corporation of India -LIC)) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். ₹1560481.84 கோடி (US $ 260 பில்லியன்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது .
ஒருவரின் வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்குவது பொதுவாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்துக்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனம் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மக்கள்தொகையான 130 கோடியில், சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத இடத்தை, இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
246 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து நாட்டுடைமையாக்கி 1956 செப்டம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஆயுள் காப்பிட்டு நிறுவனமான(எல்ஐசி) இது 2015 ஆம் ஆண்டு வைரவிழாவினைக் கொண்டாடியது.
இந்திய மக்களில் பலர் இந்நிறுவனத்தின் எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், மைக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். சாமானிய மக்களுக்கென குறைந்த பிரீமியத்தில் பாலிசியாக, மைக்ரோத் திட்டம் செயல் படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் சந்தா வரம்புகள், பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, சாதரண மக்கள் கட்டும் வகையில் உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் ஏழைகளாகக் கருதப்படும் மக்களும் செலுத்தக் கூடிய வகையில், மிகவும் குறைவானத் தொகையை கொண்டது ஆகும்.
இந்த பெருமைவாய்ந்த எல்ஐசி நிறுவனத்தில்தான் காப்பீடு ஆலோசகர் (Insurance Advisor) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த எல்ஐசி (LIC) நிறுவனத்தில் காப்பீடு ஆலோசகர்(Insurance Advisor) பணிக்கென மொத்தமாக 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காப்பீடு ஆலோசகர்(Insurance Advisor) பணியிடத்துக்கான கல்வித்தகுதி:
காப்பீடு ஆலோசகர்(Insurance Advisor) பணியிடத்துக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
காப்பீடு ஆலோசகர்(Insurance Advisor) பணியிடத்துக்கான வயதுத்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
காப்பீடு ஆலோசகர்(Insurance Advisor) பணியிடத்துக்கான மாத சம்பளம்:
இந்த எல்ஐசி நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக தரப்படும்.
ஆட்கள் தேர்வு செய்யும் விதம்:
வரும் டிசம்பர் 22-ம் தேதிக்குள் (22.12.2023) காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் விதம்:
காப்பீடு ஆலோசகர் (Insurance Advisor) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 22.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://sewayojan.up.nic.in/pJobdescriptionMela.aspx?id=/lg2OnEzNoV8c9k7dXTA2Q== என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












