கேரளா சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை!

Posted By: Kani

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ட்ராவல் ஆபரேஷன் டிரெயினி
பணி: ஹோட்டல் ஆபரேஷன் டிரெயினி
பணி: வெயிட்டர், குக், வரவேற்பாளர், ஹவுஸ் கீப்பிங் டிரெயினி
பணி: பிளம்பர், எலெக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக்

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18-05-2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Office of the Personnel Officer, KTDC Ltd., Mascot Square, Trivandrum - 695033

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Ktdc invites HRD trainees for various units in Kerala & Chennai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia