மும்பை கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை!

Posted By: Kani

மும்பை கொங்கன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 113

பணி: ஸ்டேஷன் மாஸ்டர்-55

கல்வித்தகுதி: பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கூட்ஸ் கார்டு-37

கல்வித்தகுதி: பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அக்கவுண்ட் அசிஸ்டண்ட்-11

கல்வித்தகுதி: பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிபிஏ, எம்பிஏ முடித்திருப்பது விரும்பந்தக்கது.

பணி: சீனியர் கிளார்க்-10

கல்வித்தகுதி: பி.காம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01-07-2018 ஆம் தேதியின் படி 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமும், எஸ்.டி., எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.250 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2018

விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் வரும் 12.05.2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

English summary
konkan railway corporation limited recruitment for the post of various non technical posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia