தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கரூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, Security Guard பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கரூர் சமூக நல அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Centre Administrator - 01
- Case Worker - 04
- Security Guard / Driver - 02
- Multi- purpose Helper - 01
மொத்த காலிப் பணியிடம் : 08
கல்வி :
Centre Administrator, Case Worker - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு முதுநிலை சமூகப்பணி, சட்டப்படிப்பு, உளவியல், வளர்ச்சிப்பணி, சமூகவியல் போன்ற பாடப்பிரிவில் இளநிலை, முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Security Guard / Driver - ஓட்டுநர் பணிக்கு தகுந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமாகும்.
Multi- purpose Helper - கரூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வேலை மற்றும் சமையல் தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Centre Administrator - ரூ.30,000
- Case Worker - ரூ.15,000
- Security Guard / Driver - ரூ.10,000
- Multi- purpose Helper - ரூ.6,400
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://karur.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கரூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.02.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://karur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












