10, 12-வது தேர்ச்சியா? ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர்‌ உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்‌ உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.21 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு குற்றவியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சியா? ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் புற தொடர்பு அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

பாதுகாப்பு அலுவலர்

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் ற்றவர்கள், முதுகலை பட்டதாரி (10+2+3) மாதிரி) குற்றவியல், குழந்தை வளர்ச்சி, உளவியலாளர், சமூகப்பணி, சமூகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சமூகநலம், குழந்தை , நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் முன் அனுபவம் வேண்டும்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

இளநிலை சட்டப்படிப்பு (B.L / L .L.B regular) (10+2+3) மாதிரி) குற்றவியல், குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் ஓராண்டு சட்ட உதவி பணிகள் புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

புற தொடர்பு அலுவலர்

10-ம் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • பாதுகாப்பு அலுவலர் - ரூ.21,000
  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - ரூ.21,000
  • புற தொடர்பு அலுவலர் - ரூ.8,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு,
3-வது தளம், இணைப்பு கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகர்கோவில் - 629 001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.09.2021 தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kanniyakumari.tn.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
kanyakumari Child protection recruitment 2021: Apply for Legal/Probation Officer and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+