இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 76 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பயிற்சி சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் அக்டோபர் 2020 முதல் தொடங்குகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள SSC(Tech) பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆண்கள் பிரிவில் 55 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 26 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:-
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் மனைவியாக இருந்தால் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
SSCW (Non Tech) (Non UPSC) பிரிவிற்கு ஏதேனும் ஓரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். SSCW(Tech) பிரிவில் சேர வேண்டும் எனில் ஏதேனும் ஓரு துறையில் பி.இ, அல்லது பி.டெக் முடித்திருத்தல் அவசியம்.
குறிப்பாக, பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், 01 அக்டோபர் 2020 அன்று பி.இ தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வைத்திருத்தல் வேண்டும். இதன்படி, பயிற்சியில் சேருவோர் ராணுவ பயிற்சி தொடங்கி 12 வாரங்களுக்குள் பொறியியல் முடித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.joinindianarmy.nic.in/officers-notifications.htm என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.