சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8-வது தேர்ச்சிபெற்று கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநா் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) முன்னாள் படைவீரா்கள், அவர்கள் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்று மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த கனரக வாகன உரிமம் பெற்றிருப்பதோடு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 32 வயதுக்குட்பட்டோர், மருத்துவமனையில் வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை கோரும் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஓட்டுநா் உரிமம், அனுபவ சான்று ஆகியவற்றை இணைத்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர் நேரடி நியமனம் மூலம் ஓட்டுநர் பணிக்கு தோ்வு செய்யப்படுவர். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூா், சென்னை -8.


Click it and Unblock the Notifications












