திருப்பூர் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்பின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். திருப்பூரில் நியாய விலைக்கடையில் விற்ப்பனையாளர் மற்றும் சேல்ஸ் மேன் மற்றும் உதவி விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 திருப்பூர் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் நியாயவிலை கடையில் வேலைவாய்ப்பு பெற டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருப்புர் ரேசன் கடையில் 80 விற்பனையாளர்கள் தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளமாக ரூபாய் 5000 பெறலாம். அத்துடன் கிரேடு பேமெண்டடும் பெறலாம். 30 வயதுக்குள் இருக்க பொதுப்பிரிவினர் இருக்க வேண்டும் மற்ற பிரிவினருக்கு எந்த வயது வரம்பு வேலைக்கு விண்ணப்பிக்க  தடையும் இல்லை . இப்பணிக்கு பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அத்துடன் தமிழ் படிக்க எழுத தெரிய வேண்டும்.

திருப்புர் நியாயவிலை கடையில் பேக்கர் மற்றும் சேல்ஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது ஆகும். பொதுப்பிரிவினர் இருக்க வேண்டும் மற்ற பிரிவினருக்கு எந்த வயது வரம்பு தடையும் இல்லை .

திருப்பூர் நியாய விலைக்கடையில் வேலை வாய்ப்பு மையத்தின் பதிவுகள் மற்றும் நேரடி தேர்வு முறைகளின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.150 ரூபாய் விண்ணப்பகட்டணமாக ரேசன கடை விற்ப்பனையாளர் பணிக்கு செலுத்த வேண்டும். ரேசன் கடை உதவி விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் திருப்பூரில் மாற்றக்கூடியதாக காசோலையாக டிஸ்டிரிக்ட் ரெக்ரூட்மெண்ட் பீரோ திருப்பூர், என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.

திருப்புர் ரேசன் கடை வேலைவாய்ப்பினை பெற விண்ணப்பங்கள் இலவசமாக பெறும் இடங்கள் :


1 கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம்,அறை எண் 403 , நான்காம் தளம்,மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், திருப்பூர்

2 திருப்புர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், 377 பல்லடம் ரோடு திரூப்பூர்.

3 அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், 89 தாரப்புரம் ரோடு , உடுமலைப்பேட்டை,
4 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம், 11/27 சிண்டிக்கேட் வங்கியின் மேல்மாடி, தளவாய்ப்பட்டிணம் ரோடு , தாரபுரம்,

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப முகவரியானது
டிஸ்டிரிக்ட் ரெக்ரூட்மெண்ட் பீரோ,
ஆஃபிஸ் ஆஃப் ஜாயிண்ட் கோ ஆஃப்ரேட்டிவ் சோசைட்சிஸ்,
ரூம் நெம்பர் 403,
ஃபோர்த் புளோர்,
டிஸ்டிரிக்ச் கலெக்டர் காம்பஸ் ,
திருப்பூர் 641607
தமிழ்நாடு

சார்ந்த பதிவுகள் :

சென்னை பல்கலைகழகத்தில் கெஸ்ட் லெச்சரர் வேலை வாய்ப்பு ! 

டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about job recruitment of Ration shops of Tiruppur

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia