மதுரை ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் அறிவிப்புபடி மதுரை ரேசன் கடையில் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மதுரை ரேசன் கடையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 81 ஆகும் . உதவி விற்பணையாளர் பணிக்கு மாதச்சம்பளமாக முதல் வருடத்தி ரூபாய் 5000 வழங்கப்படும். அதன் பிறகு இரண்டாம் ஆண்டு முதல் 4,300 முதல் 12,000 வரை பெறலாம்.
மதுரை ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுபிரிவினருக்கு 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.
ரேசன் கடையில் உதவி விற்பனையாளருக்கு எண்ணிக்கை 5 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பணியாளர் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 4250 தொகை முதல் வருடத்தில் வழங்கப்படும்.
இரண்டாம் ஆண்டு முதல் 3900 முதல் 1100 அலவன்ஸ் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி செய்திருக்க வேண்டும். தமிழில் முழுவதுமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு மையத்தில் கீழ் உறுப்பினர்கள் தேர்வு அதன் நடித்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :விண்ணப்பங்கள் இலவசம்
1 மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு, மொத்த் விற்பனை பண்டக சாலை, பேலஸ் மாகல் எதிரில், மதுரை
2 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம், மதுரை சரகம், சேதுபதி உயர்நிலைப் பள்ளி பின்புறம், கிருஷ்ண ராயர் தெப்பக்குளம். மதுரை
3 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம், திருமங்கலம் சரகம், 23 ராஜா ராம் தெரு, ஜவகர் நகர், புதுநகர், திரு மங்கலம், மதுரை.
4 மதுரை தாலுகா கூட்டுறவு சங்கம் விற்பனைச் சங்கம், தேம்பாவாணி அருகில், விசுவாகபுரி, மதுரை
5 மேலூர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், சந்தை பேட்டை மேலூர்,
6 திருமங்கலம் தாலுகா கூட்டுறவு விற்ப்பனைச் சங்கம், திருவேங்கடம் ரோடு, சோழ வந்தான்
7 வாடிக்கப்பட்டி தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், யூனியன் எதிரில் பேரையூர்,
8 உசிலம்பட்டி தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்கம், மதுரை மெயின் ரோடு, உசிலம்பட்டி
மதுரை ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணத்தை மதுரையில் செலுத்துமாறு மதுரை ரெக்ரூட்மெண்ட் போர்டு என்ற பெயரில் செல்லுமாறு டிடி எடுத்து அனுப்ப வேண்டும. விண்ணப்பதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
டிஸ்டிரிக்ட் ரெக்ரூட்மெண்ட் பீரோ மதுரை,
ஆபிஸ் ஆப் தி ஜாயிண்ட் ஆப் கோஆப்ரேட்டிவ் சொசைட்டிஸ்,
41&42, ஒல்டு ஆர்டிசிசி பேங் காம்பஸ்,
கிருஷ்ணராயர் தெப்பக்குளம்,
மதுரை 625 001
சார்ந்த பதிவுகள் :
டிஎன்பிஎஸ்சி இளநிலைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு