ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாடு கோ-ஆப்ரேட்டிவ் பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆவின் கூட்டுறவு பால்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 ஆகும். கூட்டுறவு பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் டெக்னிசியன் பணி ஆகும்.
டெக்னிசியன் பணிக்கு சம்பளமாக ரூபாய் 5200 முதல்20,200 வரை சம்பளமாக பெறலாம். கிரேடு பே தொகையும் ரூபாய் 2400 தொகை பெறலாம்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தகுதி:
ஆவின் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழுடன் ஏர் கண்டிசனிங், பிட்டர், டைரி, மெக்கானிக்/ வையர் மேன்/ இன்ஸ்ட்ரூமெண்டேசன் டிப்ளமோ இன் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் போன்ற பிரிவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ அல்லது அதற்குச் சமமான ஐடிஐ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பெற 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து மற்றும் ஓரல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளி படிப்பின் தேர்ச்சி அதனை வைத்து அடிப்படையாக 90 மதிப்பெண்கள் வழங்கப்படும்
ஓரல் டெஸ்ட் என்பது நேரடி தேர்வு, நேரடி தேர்வில் தேர்வு எழுதுவோர்களின் முழு விவரம், பொழுது போக்கு விருப்பங்கள், சமுகம் மற்றும் கூட்டுறவு சார்ந்த கேள்விகள் அல்லது படித்த துறை சார்ந்த கேள்விகள் என எதுவேண்டுமானாலும் கேட்கப்படலாம். ஓரல் தேர்வுக்கு 10 மதிபெண்கள் வழங்கப்படும்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்போர்க்கு பத்தாம் வகுப்பு படித்தவர்க்ள் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்து 15 மதிபெண்களும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 15 மதிப்பெண்கள், டிகிரி பட்டம் முடித்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள், முதுகலை பட்டம் பிடித்தவர்களுக்கு என மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் :
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற ஒசி மற்றும் எம்பிசி, பிசி பிரிவினர்கள் ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஜென்ரல் மேனேஜெர்க்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகழ்களுடன் இணைத்து கிழே குறிபிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
தி ஜென்ரல் மேனேஜெர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கோ ஆப்ரேட்டிவ் பால் தயாரிப்பு நிறுவனம்,
யூனியன் லிமிட்டெடு புதுக்கோட்டை ரோடு,
கோட்டப்பட்டு, திருச்சி, 620 023
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற 15.02.2018க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்துடன் வெப்சைட் லிங்க் கொடுத்துள்ளோம் .
சார்ந்த பதிவுகள்:
ஆவின் நிறுவனத்தின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்