தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Posted By:

தமிழ்நாடு பட்டு வளர்ச்சியில்  வேலைவாய்ப்பு .தமிழ்நாடு வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு தகுதியிடையோர் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாடு பட்டுவளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு நேரடி நியமனம் மூலம் பணிவாய்ப்பு நியமிக்கப்படுகிறது . தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பட்டுவளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு விருப்பமும் தகுதியிடையோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன . இப்பதவிக்கு தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையில் பணியாற்ற சம்பளமாக ரூபாய் 9,300 முதல் 34,800 தொகையும் தரவூதியம் ரூபாய் 4200
வழங்கப்படுகிறது .

1.7. 2017 லிருந்து கணக்கிடப்படும் பொது பிரிவினர் தவிர மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில்லை. பட்டுவளர்ச்சித்துறையில் பணியாற்ற பட்டு வளர்ப்பை முதண்மை பாடமாக கொண்டம் இளங்கலை அறிவியல் பிஎஸ்சி செரிக்கல்சர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

இயக்குநர் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சென்னை அலுவலகத்தில் பரிந்துரை செய்யப்படும் நபர்களும் பட்டு வளர்ச்சி துறையின் www.tnsericulture.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் . அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 200 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் . எந்த பிரிவினருக்கும் விண்ணப்ப தொகை செலுத்துவதிலிருந்து சலுகையில்லை . கட்டணத்தை இயக்குநர் , பட்டு வளர்ச்சி துறை , என்ற பெயரில் சேலத்தில் மாற்றத்தக்கதாக வரைவுவோலை எடுத்து அனுப்ப வேண்டும் .

பட்டுவளர்ச்சி துறையின் வேலையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு மற்றும் நேரடித் தேர்வு மூலம் வெற்றி பெறுவோர்களை தேர்ந்தெடுப்படுவார்கள் . பட்டுவளர்ச்சித் துறையின் நேரடித் தேர்வு, இயக்குநர் பட்டு வளர்ச்சித்துறை, சேலம் அலுவலகத்தில் நடைபெறும். பூர்த்தி செய்த வின்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய நாள் ஆகஸ்ட் 19 ஆகும் . தேர்வு நடைபெறும் நாள் செப்டம்பர் ,10 ,2017 இல் நடைபெறுகிறது .

பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் அனுப்பவேண்டிய முகவரியானது இயக்குநர், பட்டு வளர்ச்சிதுறை, அஸ்தம்பட்டி , சேலம் 636007 என்ற முகவரிக்கு அனுப்பவும் . மேலும் பட்டுவளர்ச்சி துறை முழுமையாக அறிந்துகொள்ள www.tnsericulture.gov.in என்ற இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் .

சார்ந்த பதிவுகள் :

வானிலை ஆய்வு மையத்தில் 1102 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க ரெடியா!! 

மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்!! 

English summary
above article tell about job opportunity in sericulture department

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia